/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கோடையில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் அவுரி இலைகோடையில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் அவுரி இலை
கோடையில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் அவுரி இலை
கோடையில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் அவுரி இலை
கோடையில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் அவுரி இலை
அருப்புக்கோட்டை : கோடைகாலத்தில் விவசாயிகளுக்கு அவுரி இலை நன்கு விளைந்து கை கொடுக்கிறது.
அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராம பகுதிகள் மழையின்றி கடும் வறட்சியில் உள்ளன.
ஒரு முறை இலைகளை பறித்தாலும் அடுத்த 40 நாட்கள் கழித்து மீண்டும் இலைகள் வந்து விடும். இதுபோன்று மூன்று அல்லது நான்கு முறை செடிகளில் இலைகளை பறிக்கலாம். மானாவாரி பயிரான இதற்கு தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படுகிறது. இதனால் கோடை கால பயிராக விவசாயிகள் இதை தேர்ந்துதெடுக்கின்றனர். அவுரி இலைகள் கெமிக்கல் மற்றும் மருந்து தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து அவுரி செடிகளை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு ஏக்கரில் அவுரி இலைகளை பயிரிட்டால் 2 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகின்றன. வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு பணப்பயிராக அவுரி செடி இருப்பதால் விவசாயிகள் இதை விரும்பி பயிரிடுகின்றனர்.